Skip to content

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு தாக்கல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  சூரியமூர்த்தி ,  புகழேந்தி உள்பட பலர்  அதிமுக பொதுக்குழு தீா்மானத்தை ரத்து செய்யவேண்டும். இரட்டை இலை சின்னத்தை எடப்பாடிக்கு  வழங்க கூடாது என  தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

உள்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை.  அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க  தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்,   உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பளித்தது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில்  தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை  உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்னை இருந்தால், அதனை உரிமையியல் நீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து உள்ளார்.

error: Content is protected !!