தமிழக முழுவதும் கடந்த 12.09.2023 முதல் அரசு மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனையால் மணல் குவாரிகள் மூடப்பட்டது.
இதனால் மணல் லாரி உரிமையாளர்கள் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை செலுத்த முடியாத காரணத்தினால் நிதி நிறுவனங்கள் லாரிகளை பறிமுதல் செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதேபோல மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு மாடுகளுக்கு கூட தீவனம்
வைக்க முடியாமல் மாடுகள் பட்டினியால் வாடி வருகிறது. அதனால் தமிழக அரசு 25.01.2025 அறிவித்ததுபடி புதிதாக 13 மணல் குவாரிகளை போர்க்கால அடிப்படையில் திறக்க வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் கரூர் மாயனூரில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம் என போராட்டம் நடத்தி வரும் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.