தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும், 3 அல்லது 4 மாவட்டங்களில் கள ஆய்வு நடத்துகிறார். அதன்படி நாளையும், நாளை மறுதினமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறார்.
நாளை மாலை மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 30,000க்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். அதைத் தொடர்ந்து நெய்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சியினர் 5,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைகின்றனர்.