தட்டு ரிக்ஷா வாடகைக்குத் தர மறுத்த தொழிலாளிக்கு அடி – உதை
திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (47). இவர் தட்டு ரிக்ஷா வாடகைக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல் வாரித்துறை ரோடு பகுதியை சேர்ந்த ரவுடி ரமேஷ் என்கிற துப்பாக்கி ரமேஷ் சென்று பொருட்களை எடுத்து செல்வதற்காக தட்டு ரிக்ஷாவை வாடகைக்கு கேட்டார். ஆனால் தங்கவேல் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அவரை சரமாரியாக கைகளால் தாக்கி விட்டு தப்பி சென்றார். இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இது குறித்து தங்கவேல் பாலக்கரை போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ரவுடி ரமேஷை தேடி வருகின்றனர் .
கண்ணாடி கடையில் ரூ. 45 ஆயிரம் திருட்டு..
திருச்சி காஜா பேட்டை புதுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சையது முகமது (வயது 40). திருச்சி – மதுரை சாலையில் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் இரவு கடைய கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் கடை திறக்க சென்றபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் 45 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது .இது குறித்து சையது முகமது கோட்டை போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
திருச்சி தில்லைநகர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆழ்வார்தோப்பு பகுதியில் ரோந்து சென்றார் .அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தபோது, வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திருச்சி தென்னூர் குத்ரிஷாநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் சுக்கூர் (34), தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலி (27) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு நம்பர்கள் மற்றும் ரூபாய் 200 கைப்பற்றப்பட்டது.
போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி கைது..
திருச்சி திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டுத்தலை மணி என்கிற மணிகண்டன் (வயது 28). பிரபல ரவுடியான இவர் திருவரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக தகவல் வெளியானது. இதை அறிந்த திருவரங்கம் தெப்பக்குள தெரு பகுதியைச் சேர்ந்த சதீஷ் ( 27 )என்பவர் அங்கு சென்று அவரை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டுத்தலை மணி கத்தி முனையில் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த 500 பணத்தை எடுத்துக்கொண்டு அவரை மிரட்டி தப்பி சென்றார் .உடனே சதீஷ்குமார் இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் விரைந்து சென்று ஆட்டுத்தலை மணியை கைது செய்தார் .பின்னர் அவரிடமிருந்து 100 மில்லி கிராம் எடை கொண்ட 100 போதை மாத்திரைகள் ஊசி மற்றும் இரண்டு மருந்து பாட்டில்க கைப்பற்றப்பட்டது.