Skip to content

கவுன்சிலர் டூ சிஎம்.. புதிய முதல்வர் ரேகா குப்தா..

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் 48 தொகுதிகளில் பா.ஜ., வென்று 27 ஆண்டுகள் கழித்து ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.,வில் அடுத்த முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. நேற்றைய தினம் முதல்வரை தேர்வு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பார் என்று பா.ஜ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ரேகா குப்தா நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். கல்லூரி காலம் தொட்டே தீவிர அரசியலில் இறங்கியவர். நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஷாலிமர் பாக் தொகுதியில் வென்றவர். அடிப்படையில் வக்கீலான ரேகா குப்தா, டில்லி பல்கலை. மாணவர் தலைவராக பணியாற்றியவர். 2007ல் உள்ளாட்சி தேர்தலில் கால் பதித்து உத்தரி பிதாம்புரா கவுன்சிலராக வென்றார். தெற்கு டில்லியின் மேயராகவும் முத்திரை பதித்தவர். தேசிய மகளிரணி துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது டில்லி பா.ஜ., பொதுச் செயலாளராக உள்ளார். பதவியேற்பு விழா, இன்று மதியம் 12.35 மணியளவில் ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது.  விழாவில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள்,பிற மாநில பா.ஜ., தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

error: Content is protected !!