Skip to content

தஞ்சை அருகே ரோந்து போலீலை தாக்கிய 3 பேர் கைது…

தஞ்சாவூர் பைபாஸ் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக டெல்டா காப் ரோந்து போலீசார் பைக்கில் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ம் தேதி டெல்டா காப் காவலர் சிலம்பரசன் பைக்கில் பட்டுக்கோட்டை பைபாஸ் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு இருந்தார்.

இப்போது அங்குள்ள மேம்பாலத்தில் 3 பேர் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டிருந்த சிலம்பரசன் அவர்களை பிடித்து விசாரித்தார். உடன் மூன்று பேரும் சிலம்பரசனை பணி செய்ய விடாமல் தாக்கினர்.

இதுகுறித்து தாலுகா போலீசில் சிலம்பரசன் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசாரை பணி செய்ய விடாமல் தாக்கியதாக திருமங்கலக்கோட்டை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரின் மகன் விஜய் ஆனந்த் (44), எட அன்னவாசல் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் அன்பழகன் (34), ஒரத்தநாடு கரம்பன் கோட்டை பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் பிரபாகரன் (35) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!