இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை…
திருச்சி புதுக்கோட்டை சாலை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் இவரது மகள் கீர்த்தனா (24 ) .இவர் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு கீர்த்தனா அம்பேத்கர் நகரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்தார். பின்னர் மன உளைச்சலில் இருந்தவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் தங்கமணி பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
முதியோரிடம் கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர் கைது..
திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் மேலதெருவைச் சேர்ந்தவர் பாலாஜி ( 60) இவர் ஸ்ரீரங்கம் அம்பேத்கார் பகுதியில் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் தீமை விளைவிக்க கூடிய போதை மாத்திரைகள் விற்ற வாலிபரிடம் ஏன் இப்படி செய்கிறாய் என தட்டி கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர் முதியவரை கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ. 500 பணத்தை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து திருவானைக்காவல் பாரதியார் தெருவை சேர்ந்த ரங்கநாதன் (24) என்ற வாலிபரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 60 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
வாகன பேட்டரி திருட்டு
திருச்சி செந்தண்ணீர்புரம் குமரன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ( 27 ) இவர் ஒரு நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது ஆட்டோவை செந்தண்ணீர்புரம் அய்யனார் கோவில் நிறுத்தி வைத்திருந்தார்.
இரவில் மர்ம நபர்கள் அந்த ஆட்டோவில் பேட்டரியை திருடி சென்று விட்டனர். இது குறித்து ராஜா பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.