திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருபுள்ளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி ( 39.)இவரிடம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் டிராவல்ஸ் மற்றும் பைனான்ஸ் நடத்தி வரும் 3 நபர்கள் அறிமுகமாகி தங்களுடைய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், பங்குதாரராக சேருமாறு கூறியுள்ளனர். இவர்களின் ஆசை வார்த்தையை நம்பி ரவி ரூ.14 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அந்த மூன்று நபர்களும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தனர். இதையடுத்து ரவி கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் சீனிவாச நகரை சேர்ந்த தந்தை மற்றும் 2 மகன்கள் மீது மோசடி பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து
வருகின்றனர்.
