போப் பிரான்சிஸின் இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பதாக வாடிகன் அறிவித்துள்ளது.
88 வயதான போப் பிரான்சிஸ் உடல்நல குறைவு காரணமாக கடந்த 14ம் தேதி இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது நுரையீரல்கள் இரண்டிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் நீடித்த நிலையில் சிடி ஸ்கேனில் நிமோனியா கண்டறியப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸின் உடல் நிலை சற்று சிக்கலாக இருப்பதாகவும், இருப்பினும் அவர் செய்தித்தாள் படிப்பதாகவும், பிரார்த்தனையில் ஈடுபடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது