தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா தலைநகரம். வளர்ந்து வரும் பேரூராட்சி, பாபநாசத்தில் தெருவிற்கு தெரு நாய்கள் கூட்டமாகத் திரிகின்றன. ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இதனால் சாலைகளில் செல்லும் பைக் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயப் படுகின்றனர். சைக்கிளில் செல்லும் மாணவர்களை துரத்துகின்றன. குழந்தைகளால் தெருக்களில் விளையாட முடியவில்லை. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகளை கடிக்கத் துரத்துகின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நடந்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. தெருக்களில் படுத்துக் கொள்கின்றன. தெரியாமல் மிதித்து விட்டால் கடித்து விடுகின்றன. பாபநாசத்தில் பெருகி வரும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்த பாபநாசம் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.