கரூரில் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள், ROTARACT CLUb மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆகியோ இணைந்து இரத்த தானம் முகாம் நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் கலந்து கொண்டு நூறு யூனிட்டுகளை தானமாக அளித்தனர்.
கரூர் மாவட்டம் மாநகராட்சி பகுதியில் உள்ள தான்தோன்றி மலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள்,
ROTARACT CLUb மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து அரசு கலைக் கல்லூரியில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
இந்நிகழிச்சியில் அரசு கல்லூரி முதல்வர் சுதா அவர்களின் தலைமையில் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 100 யூனிட் இரத்தம் கொடையாக வழங்கினர். சேகரிக்கப்பட்ட இரத்தம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் உள்ளவர்களுக்கு முதலுதவி சிகிச்சை விபத்து பிரசவம் உள்ளிட்ட பல்வேறு நோயாளிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் ரத்தத்தை பயன்படுத்திக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.