புதுக்கோட்டை மாமன்னர்கலைமற்றும் அறிவியல் கல்லூரி வளாக கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்விக்கடன் முகாம் நடத்தியது. முகாமினை கலெக்டர் மு.அருணா
துவக்கி வைத்து மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் உதவித்தொகைக்கான வங்கி காசோலைகள் மற்றும் ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கிமேலாளர் த.நந்தகுமார், முதன்மை மேலாளர் (எஸ்.பி.ஐ.)எஸ்.பிரியாமகேந்திரன் , கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
