Skip to content

கோவையில் சிறுமி பலாத்காரம்- கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

கோவையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஏழு மாணவர்கள், குனியமுத்தூர் பகுதியில்  தனியாக அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் சமூக வலைதளம் மூலம் கோவையைச் சேர்ந்த 17 வயது  மாணவியுடன்   தொடர்பில் இருந்தனர்.   அவுட்டிங் போகலாம்  ஆசை வார்த்தை கூறி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களது அறைக்கு வரவழைத்தனர்.  மாணவியும்   பிக்னிக் போகிறோம் என நினைத்து  பாட்டியிடம் வறி விட்டு வந்து விட்டார்.

மாணவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு வந்த பிறகு தான்  தெரிந்தது.  பிக்னிக் எதுவும் இல்லை என்று.  சரி  காதலன்  தான் இருக்கிறானே என  மாணவியும் மகிழ்ச்சியுடன் இருந்தார்.

சிறிது நேரத்தில் தான்  அந்த  கொடூரம் அரங்கேறியது. மாணவர்கள்  ஒருவர் பின்  ஒருவராக மாணவியை  சீரழிக்க  தொடங்கினர்.  இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட   மாணவியால்  உடனடியாக வீடு திரும்பவில்லை.   வெகுநேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால், அவரது பாட்டி  போலீசில் புகார் செய்தார்.  வழக்குப்பதிவு செய்த போலீசார்  சிறுமி இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர். அவரை மீட்டு விசாரணை நடத்திய போது, சிறுமி  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஏழு மாணவர்களையும்  போலீசார் கைது செய்து அவர்களின் மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

error: Content is protected !!