தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போடுவதும், உடனடியாக அனுமதிக்க மறுப்பது குறித்தும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் 4 நாட்கள் நடந்தது.
இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இருதரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.
ஆளுநருக்கு எதிரான வழக்கில் இன்று மாலைக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிற்பித்திருந்த நிலையில்
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்க்வி, ராகேஷ் திவேதி ஆகியோரின் வாதங்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
முகுல் ரோஹ்த்கி, வில்சன் மற்றும் ஆளுநர் தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி ஆகியோர் இன்று மாலைக்குள் வாதங்களை தாக்கல் செய்ய உத்தர விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தங்கள் தரப்பு வாதங்களை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.