Skip to content

தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு…

ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி, சிங்காரவேலரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி, இதழாசிரியர், எழுத்தாளர், சென்னை மாநகராட்சி உறுப்பினர் எனப் பல நிலைகளில் இருந்து பாட்டாளி மக்களுக்காகவும் இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி #சிங்காரவேலர் பிறந்தநாள்.

Image
தாம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது குடிஅரசு இதழுக்கு வழிகாட்டுமாறு தந்தை பெரியார் கேட்டுக்கொண்டதும் சிங்காரவேலரைத்தான். “போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி.  எனத் திராவிடப் புரட்சிக்கவி பாரதிதாசனார் போற்றியதும் அவரைத்தான். தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!