இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி நேற்று புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு நடந்தது. இதில் தற்போதைய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான ஞானேஸ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர். ஞானேஸ்வர் குமார் தேர்வுக்கு ராகுல் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் ஞானேஸ் குமார் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றததில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி ஞானேஸ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அந்த மனுவில் கூறி உள்ளார். இந்த மனு , 41வது மனுவாக விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. அவசியம் கருதி மனுவை முன்னதாக ஏற்று விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டுள்ளது.