அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல கடையைத் திறக்க சென்ற கடை உரிமையாளர் ராஜன், கடை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் இடத்தில் இருந்த பணத்தை, மர்ம நபர், அலுவலக கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை,
கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணத்தை திருடிய நபர் குறித்து சிசிடிவி காட்சிகள் கொண்டு, அடையாளங்களை சேகரித்தும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபரின் அடையாளங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.