கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியைச் சார்ந்த கணேசன் இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளியான சக்தி பிரபு (20) என்ற ஆண் குழந்தை உள்ளது.
இவருக்கு அரசு சார்பில் 30 வருடங்களுக்கு முன்பாக வழங்கப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்துள்ளார் பல வருடம் ஆனதால் வீடு மிகவும் மோசமான நிலையில் சிதறமடைந்ததால் தற்போது இரண்டு மாதங்களுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
மேலும் மாற்றுத்திறனாளி சக்தி பிரபுவிற்கு மருத்துவ செலவிற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும், வீடு சரி செய்ய போதிய பணம் இல்லை எனவும் எனவே அரசு தாமாக முன்வந்து சிதலமடைந்த வீட்டை சரி செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனது மாற்றுத்திறனாளி மகனை தோளில் சுமந்து கொண்டு கோரிக்கை மனு வழங்கினார்.