கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் தர்மசேனன் தலைமையில் வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிபதி செயல்பாடுகளை கண்டித்து பணியை புறக்கணித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரு தலைபட்சமாக நீதிபதி வழக்குகளை நடத்துவதாகவும், விருப்பு,வெறுப்பு காரணமாக சட்டப்படி செயல்படாமல் நீதிபதி தன் இஷ்டப்படி செயல்படுவதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதன் காரணமாக வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவதோடு, வழக்காடிகளும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நீதிபதி தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செய்தி யாளர்களிடம் தெரிவித்த வழக்கறிஞர்கள் சங்க கரூர் மாவட்ட செயலாளர் நகுல்சாமி தெரிவிக்கும் போது, நீதிபதியின் யதோச்சதிகார போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், சங்க முடிவின்படி இன்றும் நாளையும் நீதிமன்றத்தை புறக்கணிப்தாகவும்.
மேலும் 19ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்பதால், அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.