Skip to content

கள்ளக்காதலை கைவிடாத கணவன்… அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி… தஞ்சையில் பரபரப்பு….

விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது42). இவருடைய மனைவி கலைவாணி (38). இவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் முடிந்து 12 வயது மற்றும் 9 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் வேலைக்காக கும்பகோணத்திற்கு வந்து ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக அன்பரசன் திருபுவனம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த மற்றொரு பெண்ணுடன் அன்பரசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனை அறிந்த கலைவாணி தனது கணவரிடம் வேறு பெண்ணுடன் இருக்கும் கள்ளக்காதலை கைவிடமாறு தெரிவித்து தகராறு செய்து வந்துள்ளார். இதனால் பேக்கரி வேலையை விட்டு வந்த அன்பரசன் கடந்த 2 மாதங்களாக தச்சு தொழில் பார்த்து வந்துள்ளார். இருந்தாலும் அன்பரசன் அந்தப் பெண்ணுடனான தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து செல்போனில் பேசி தொடர்பை நீட்டித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் இந்த பிரச்சனை தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அன்று இரவு கலைவாணி, அன்பரசனிடம் கள்ளக்காதலை கைவிட்டு குடும்பத்தை மட்டும் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். அப்போது அன்பரசன் மற்றும் கலைவாணி மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சுமார் இரவு 10 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த அன்பரசன் தலையில் அம்மிக் குழவி கல்லை போட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அன்பரசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து கலைவாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!