Skip to content

சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கான… புதிய விதிகள் அமல்…

  • by Authour

ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஃபாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டால், சுங்கக்கட்டணத்தை விட இரண்டு மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கக்கட்டணம் செலுத்த ஃபாஸ்டேக் முறை நடைமுறையில் உள்ளது. இதன்படி வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும், ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஃபாஸ்டேக் விதிமுறைகளில் ஒன்றிய அரசின் அமைப்பான இந்திய தேசிய கட்டணக் கழகம் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வாகனங்கள் சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் ஃபாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டு இருந்தாலோ, ஹாட் லிஸ்டில் இருந்தாலோ குறைந்த இருப்பை கொண்டு இருந்தாலோ சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். ஃபாஸ்டேக் இந்த 2 நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யவில்லை என்றால் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும். மேலும் அத்தகைய வாகனத்திற்கு சுங்கக்கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும். பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பே ஃ பாஸ்டேக்கில் போதிய பணயிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். மேலும் பயனர் விவரங்களை அவ்வப்போது பதிவு செய்து, அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
error: Content is protected !!