Skip to content

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்…

போதை மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது….

திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து நேற்று மாலை அரியமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமராஜர் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 3வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காட்டூர் பாத்திமாபுரம் 2வது தெரு பகுதி சேர்ந்த நசுருதீன் (24)அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த முகமது மஜீத் ( 23 )ஆகிய இருவரைஅரியமங்கலம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 20 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

திருச்சி ஜீவா நகர் அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (60 ) இவர் கடந்த 14ம் தேதி இரவு ஜீவா நகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி மது அருந்த பணம் கேட்டு உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஜீவா நகர் கட்டபொம்மன் தெரு பகுதியை சேர்ந்த சுரேஷ் ( 39 ) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், கோட்டை, காந்தி மார்க்கெட் , பாலக்கரை ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் மலைப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது52)இபி ரோடு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ( 20)வடக்கு தாரா நல்லூர் காமராஜர் பகுதியை சேர்ந்த தர்மதுரை (21), பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த சுனில் (வயது 21 )ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இ அவர்களிடமிருந்த 240 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பணம் பறித்த 2 பேர் கைது..

திருச்சி செம்பட்டு புதுத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25).இவர் நேற்று ஏர்போர்ட் முல்லை நகர் பகுதியில் நடந்து சென்றார்.அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர் மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 500 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கலைவாணர் தெருவைச் சேர்ந்த பிரேம் (28), காமராஜர்நகர் சங்கம் தெருவை சேர்ந்த மணிகண்டன் ( 22 ) ஆகிய 2 பேரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.  இதேபோன்று கீழகொண்டையாம் பேட்டை குமரன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (48).இவர் நேற்று மேலூர் அய்யனார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.500 பணத்தை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில்ஸ்ரீரங்கம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த பிரபு (42 ) என்பவரை திருவரங்கம் போலீசார் கைது செய்தனர்

error: Content is protected !!