Skip to content

பொள்ளாச்சி அருகே மதுபோதையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அடுத்துள்ள அரசம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கான்பிடன்ஸ் பெட்ரோலியம் இண்டியா லிமிட்டெட் என்ற சிலிண்டர்களுக்கு கேஸ் நிரப்பும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. .இந்த ஆலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி இருந்து வேலைபார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு அங்கு பணிபுரிந்துவரும் மத்திய பிரதேசம், ராய்சேன் மாவட்டத்தை சேர்ந்த ரவீந்திரா என்பவருக்கு பிறந்தநாள் என்பதால்
மது விருந்துடன் கொண்டாட திட்டமிட்டு மதுபாட்டில்கள் கொண்டுவரப்பட்டு அனைவரும் மது அருந்தி உள்ளனர்.

அப்போது வட மாநில தொழிலாளர்களுக்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது..ஒருவருக் கொருவர் தாக்கியுள்ளனர்.இதில் மத்திய பிரதேச மாநிலம் ராய்சேன் பகுதியைச் சேர்ந்த பூபேந்திரா வயது (20)பலமாக தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் 3 வட மாநில தொழிலாளர்களை கைது செய்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பூபேந்திரா மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அடித்து கொள்ளப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா எனபது குறித்து கிணத்துக்கடவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

error: Content is protected !!