தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும்.
ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை.
அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது என
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி அளித்திருந்த நிலையில்,
திருச்சி விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது…
மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. 2158 கோடி ரூபாயை
மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். ரூ 19 கோடி செலவில்
அனைத்து அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு குறித்து பயிற்றுவிக்கிறோம்.
ஆனால் தற்போது SSA நிதி நிறுத்தப்பட்டுள்ளதால் அதனை தொடர இயலவில்லை.
மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறது. இந்த இருமொழிக் கொள்கையால் தமிழகத்தில் என்ன தீங்கு ஏற்பட்டுள்ளது?
isro வில் பணிபுரியும் நாராயணன் உள்ளிட்ட பலரும் தமிழக அரசு பள்ளியில் பயின்றவர்கள் தான்.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் தமிழ் வழி பயின்ற மாணவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள். சம்பந்தமே இல்லாமல் மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துவது ஏன்? கேள்வி எழுப்பினர்.
கேவி எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதேசமயம் சிபிஎஸ்சி/ மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் என சட்டம் இயற்றியுள்ளோம்.கடந்தாண்டு தமிழ் வழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் புத்துணர்வு முகாம் நடத்தி உள்ளோம்.
இதுபோன்று தமிழ் சார்ந்த நல்ல பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
பள்ளி மாணவ மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் தொடர்ந்து
நமது கொள்கைகளை விட்டுக் தமிழக அரசு சொந்த நிதியில் மாணவர்களுக்கு தரமான
கல்வியை வழங்கி வருகிறது. தமிழக முதல்வரின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் எப்படி அவரத செல்வாக்கு உயர்ந்திருக்கும்? என கேள்வி எழுப்பினர். மத்திய அரசிடமிருந்து கல்விக்கான நிதியை பெறுவதற்கு தமிழக முதல்வருடன் கலந்து பேசி நீதிமன்றத்தை அணுகுவதா ?இல்லையா? என முடிவெடுப்போம் என்றார்.