Skip to content

பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!….

  • by Authour

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு இரவில் 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்ட பின்னர் உணவிற்கு பணம் கேட்ட நிலையில், அவர்கள் பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து உணவக உரிமையாளர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும், ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் கொடூரமாக தாக்குவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக  விசாரணை நடத்திய போலீசார் 3 பேரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த 3 பேரும் ஒரே இரவில்  வெவ்வேறு இடங்களில் மூன்று பேரை வெட்டி பணத்தைப் பறித்தது தெரியவந்துள்ளது.  அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய இடங்களிலும் அரிவாளால் வெட்டி பணம் பறித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

error: Content is protected !!