ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது ஒவ்வொரு தெருக்களிலும் சுமார் 10 முதல் 15 நாய்கள் வரை தெரிகிறது .பகல் நேரங்களில் இரவு நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனபால் 60, தமிழ்ச்செல்வி 23 , பாரதி 40 ஆகியோரை வெறிநாய் ஒன்று திடீர் என தாக்கி கடித்துக் குதறியது இதில் படுகாயம் அடைந்தந்துள்ளனர். தொடர்ந்து அந்த வெறி நாய் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சுலோச்சனா 60 என்பவரையும், பாட்டி குளம் பகுதியில் தண்ணீர் கேன் போடச் சென்ற நரசிம்மன் 59, தனியார் கம்பெனிக்குச் சென்று கொண்டிருந்த குமார் என்பவரையும் வெறிநாய் கடித்ததில் பலத்த
காயம் ஏற்பட்டது .அனைவரும் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அரை மணி நேரத்தில் ஆறு பேரை கடித்த வெறி நாயால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வெறி நாயை நகராட்சி நிர்வாகம் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக அலுவலர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.