Skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு…

  • by Authour

பிப்ரவரி 14-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்திருக்கிறது. இன்று மட்டும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்துள்ளது. தொடர் அதிகரிப்பிற்கு பிறகு இந்த மாதத்தில் முதல்முறையாக 100 ரூபாய் விலை குறைந்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,890-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,607-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை கிட்டத்தட்ட அனைத்து நாட்களிலுமே ஏற்றத்தை கண்டது. இதனால் இன்று விலை குறையுமா? நாளை விலை குறையுமா? என்று புதிதாக நகை வாங்க இருந்தவர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். அதற்கு ஏதுவாக இன்றைய தினம் கிராமுக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது. இது நகைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்றைய (14/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,990-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 63,920-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.79,900-திற்க்கும் விற்பனையானது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,716-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 69,728-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 87,160-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,585-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,680-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 65,850-க்கும் விற்பனையானது.

இன்றைய (15/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.100 குறைந்து ரூ. 7,890-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.800 குறைந்து ரூ. 63,120-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.1000 குறைந்து ரூ.78,900-திற்க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!