Skip to content

நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஒரு புரூஸ் லீ… டைரக்டர் மிஷ்கின் …..

  • by Authour

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‘டிராகன்’. இந்த படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ”டிராகன்” படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் வருகிற 21ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் இசை வெளியீட்டு நேற்று நடைபெற்றது.  அதில் விக்னேஷ் சிவன், மிஷ்கின் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியின் மேடையில் இயக்குனர் மிஷ்கின் நடிகரும், இயக்கனருமான  இயக்கனருமான பிரதீப் ரங்கநாதனை பற்றிய சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.

அதாவது, “பிரதீப் ரங்கநாதன் புரூஸ் லீ-யை போன்றவர். இதுவரைக்கும் அவன் ஆக்சன் படம் பண்ணவில்லை. ஒருவேளை என் இயக்கத்தில் பண்ணுவான் என்று நினைக்கிறேன்.  ரொம்ப நாட்களுக்குப் பிறகு சினிமாவுல ஒரு இளம் ஸ்டார் பார்க்கிறேன். அது அதிர்ஷ்டத்துல நடக்கல. யாரும் கைகொடுத்து அவரை தூக்கி விடல. எல்லாம் அவர் உழைப்பு.”என்று கூறியுள்ளார். டைரக்டர் மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் ‘பிசாசு 2’, விஜய் சேதுபதி நடிப்பில் ‘டிரெயின்’ ஆகிய படங்களை இயக்கி வருவது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!