Skip to content

வாலிபர் கண்மூடி தாக்குதல்… ராணிப்பேட்டை போலீஸ் மீது புகார்….

வேலூர் சத்துவாச்சாரி பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் ( பொறுப்பு சத்துவாச்சாரி காவல் நிலையம்) போலீசார் உடன் பணியில் இருந்த போது அவ்வழியாக சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த எலெக்ட்ரீசியன் பாபு என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் செல்போனில் பேசிக்கொண்டே வந்தார்.

அதைக் கண்ட ஆய்வாளர் சீனிவாசன் இருசக்கர வாகனத்தை மடக்கி நிறுத்தி இருசக்கர வாகனத்தை விட்டு கீழே இறங்குமாறு கூறினார்.

வாலிபர் பாபு கீழே இறங்கிய போது ஏன் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுகிறாய் எனக் கூறி திடீரென ஆய்வாளர் சீனிவாசன் பாபுவை அடித்தார் கூறப்படுகிறது. இந்த நிலையில் குலைந்த பாபு ஆய்வாளரிடம் என்னை ஏன் அடித்தீர்கள் நான் என்ன குற்றம் செய்தேன் என வாக்குவாதத்தில்

ஈடுபட்டார். மேலும் வாக்குவாதத்தின் போது ஆய்வாளரை தகாத வார்த்தையில் பாபுவும் திட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆய்வாளர் சீனிவாசன் பாபுவை சரமாரியாக தாக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றும் போது இரண்டு கால்களும் வெளியில் இருந்த நிலையில் வாகனத்தில் பின் கதவை மூல முயன்ற பொழுது பாபுவின் காலை உடைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செல்போன் பேசி வந்தவரை தீவிரவாதியை மடக்கி பிடிப்பதை போல் பிடித்து அடித்து மூக்கில் குத்தி குண்டு கட்டாக பாபுவை தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றிய சம்பவம் மனிதாபிமானற்ற செயல் என பொதுமக்கள் முகம் சுளித்தனர் . காவல்துறையினரின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  காவல்துறையின் ஆணையர் பொதுமக்களிடம் காவல்துறையினர் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்திய நிலையிலும் இது போன்ற காவல்துறையினர் அராஜகமாக செயல்படுவது காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.

error: Content is protected !!