ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள குர்ரம்கொண்டா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்ற இளைஞரும் மதனப்பள்ளியில் உள்ள சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர். இவர்கள் படித்து கொண்டிருக்கும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
இருவரது படிப்பு முடிந்த நிலையில் அவரவர் ஊருக்கு சென்ற நிலையில் இருவருக்குமான பேச்சுவார்த்தை குறைந்த அளவு இருந்து வந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி வேறொரு ஆணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனை காதலனான கணேஷ் தெரிந்து கொண்ட நிலையில் அந்த பெண்ணிடம் சென்று வற்புறுத்தி உள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் தன் பெற்றோர்கள் பார்த்த இளைஞனையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமும், ஏமாற்றமும் அடைந்த கணேஷ் அந்த பெண்ணை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அந்த பெண் இன்று காலை நகர் வழியாக நடந்து வந்து கொண்டிருக்கும் போது அந்த இளைஞன் வழிமறித்து
அந்த பெண்ணின் மீது கத்தியால் குத்தி, முகத்தில் ஆசிட்டை வீசினார். பெண்ணின் அலறல் சத்தத்துடன் இருந்த நிலையில் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். அந்த பெண்ணை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணையின் பேரில் தேடி வருகின்றனர்.