நடிகர் கார்த்தி இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் ’மெய்யழகன்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் “வா வாத்தியார்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கார்த்தி நடிக்கும் 26வது படமாக ‘வா வாத்தியார்’ உருவாக்கி இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர். ரசிகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், வா வாத்தியார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் “உயிர் பத்திக்காம” இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது