Skip to content

கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 11 ஜோடிகளுக்கு திருமணம்…..

  • by Authour

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள புகழ் சோழர் மண்டபத்தில் 11 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. வட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது .

இதில் 11 ஜோடிகளுக்கு இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க முக்கிய பிரமுகர்கள் தாலியை எடுத்துக் கொடுக்க உறவினர்கள் முன்னிலையில் மணமகன்கள் தாலியை கட்டினர். அவர்களை அங்கிருந்த அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்தனர். அதனை தொடர்ந்து அக்னி சுற்றியும்,

மாலை மாற்றியும், மெட்டி அணிவித்தும் மகிழ்ந்தனர். அவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் குடும்பம் நடத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் சீதனமாக வழங்கப்பட்டது. ஆலய வளாகத்தில் உறவினர்களிடமும், பெற்றோர்களிடம் மணமங்கள் ஆசீர்வாதம் வாங்கியும், புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

error: Content is protected !!