Skip to content

முத்தரையர் வாக்கு விஜய்க்கு இல்லை- திருச்சி முழுவதும் பரபரப்பு சுவரொட்டி

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக கட்சியில்  கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  இந்த நியமனங்களில்  முத்தரையர் சமூகத்தை சேர்ந்த யாருக்கும்  மாவட்ட செலாளர் பதவி  வழங்கப்படவில்லை. இதனால் அந்த சமூகத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி முத்தரையர்கள் என்ற பெயரில்  திருச்சி மாவட்டம் முழுவதும விஜயை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. உங்கள் கட்சிக்காக எங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததே எங்களுக்கு  மிச்சம் என்ற  தலைப்பில்,  கூறி இருப்பதாவது:

மக்கள் இயக்கத்திலிருந்து உங்களுக்காக உழைத்த முத்தரையர் சமுதாயத்திற்குஅங்கீகாரம் வழங்காத தவெக தலைவரை வன்மையாக கண்டிக்கிறோம்

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் எல்லாம் பிற பெரும்பான்மை சமுதாயத்திற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கிவிட்டு, திருச்சி மாவட்டத்தில் மட்டும் எங்கள் முத்தரையர் சமுதாயத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர் பதவி கூட வழங்காமல் அநீதி இழைத்த தவெக தலைவர் விஜய் க்கு ஒட்டுமொத்த முத்தரையர்களின் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எங்களுக்கு அங்கீகாரம் தராத…நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா? கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை….

முத்தரையர் சமுதாய வாக்கு உங்களுக்கு இல்லை… விழித்துக் கொள்ளுங்கள் முத்தரையர் இனமே….

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!