Skip to content

வால்பாறையில் வனத்துறையினர் ரோந்து பணியின்போது…. காட்டு யானை வந்ததால் பரபரப்பு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் பொள்ளாச்சி வால்பாறை சாலை நவமலை, கவி அருவி, அட்டகட்டி , சர்க்கார் பதி டாப்ஸ்லிப் போன்ற இடங்களில் கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த சுள்ளி கொம்பன் நடமாட்டம் உள்ளது இதனால் வனத்துறையினர் நவமலை பகுதிக்கு தனியார் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மேலும் வால்பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாலை 6 மணி முதல் தடை விதித்துள்ளனர் மாலை 5 மணிக்கு மேல் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் இந்த காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனத்துறை வாகனத்தில் காட்டு யானை அடர் வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறை வாகனத்தின் மூலம் ஒலிபெருக்கியில் சைரன் ஒலி எழுப்புகின்றனர் இந்த காட்டு

யானை வனத்துறை வாகனத்தை கண்டால் ரிவேசல் செல்கிறது என வனத்துறையினர் தெரிவித்தனர் மேலும் பொள்ளாச்சி வனச்சரக அதிகாரி ஞானவேல் பாலமுருகன் கூறுகையில் இந்த காட்டு யானை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கேரளா வனப்பகுதியில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வன சரக பகுதிக்கு வந்துள்ளது.

இதன் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறையினர் இரவு பகலாக இந்த காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் காட்டு யானை கண்டு புகைப்படம் வீடியோ எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் தற்போது கோடை வெயில் தொடங்க உள்ள நிலையில் சாலை ஓரம் உள்ள புற்கள் காய்ந்த நிலையில் உள்ளது ஆதலால் சுற்றுலா பயணிகள் தீப்பெட்டி சிசர் லைட் மதுபானங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் போன்றவற்றை வனத்துறை சோதனை சாவடியில் சோதனை செய்து பறிமுதல் செய்யப்படுகிறது தற்போது இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் மாங்காய் சீசன் தொடங்க உள்ள நிலையில் காட்டு யானைகள் அதிக அளவில் வரப்படும் என்பதால் வனப்பகுதி ஓரம் உள்ள இடங்களில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார் .

error: Content is protected !!