Skip to content

பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமையை கண்டித்து…கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகளை கண்டித்தும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்த கோரியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்தியா விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவி மூவ்மெண்ட் மாவட்ட தலைவி காமிலா அவர்கள் கூறுகையில் ஒழுக்கம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக இருந்தாலும் சரி சாமானியனாக இருந்தாலும் கடுமையான தண்டனை குற்றவாளிகளுக்கு கொடுக்க வேண்டும்.இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க விமன் இந்தியா மூவ்மென்ட் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடந்து இரண்டு மாதங்களில் நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறோம். எங்கு பெண்கள் பாதிக்கப்பாட்டாலும் விம் விழிப்புணர்வு அளிப்பதோடு தக்க தண்டனை அளிக்க பல போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று தெரிவித்து கொள்கிறோம்..இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தமிழக அரசு கடுமையான தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

மாவட்ட செயளாலர் ஷியான தொகுப்புரை வழங்கினார். தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி தலைவர் : ஜன்னா வரவேற்புரை ஆற்றினார்.SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்ட செயலாளர் அபுதாகிர் கண்டன உரையாற்றினார்.  கோவை மாவட்டபொதுச்செயலாளர் பைரோஸ் , துணை தலைவர் சல்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இறுதியாக மாவட்ட கமிட்டி உறுப்பினர் அஸ்மா நன்றி உரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் பெண்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

error: Content is protected !!