Skip to content

பாபநாசத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி…. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு…

  • by Authour

பாபநாசம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறுவர்களுக்கான சதுரங்கப் போட்டி நடந்தது.
தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் சரவணன் தலைமை வகித்தார். முன்னதாக பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் சக்தி வேல் வரவேற்றார். உதவி ஆளுநர் மண்டலம் 13 அறிவழகன், தமிழ்நாடு மாநில சதுரங்க கழக துணைச் செயலர் செந்தில்குமரன், தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழக துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இதில் மாநில அளவில் 19 மாவட்டங்களிலிருந்து 300 பேருக்கு மேல் கலந்துக் கொண்டனர். முன்னதாக போட்டியை இளங்கோவன் தொடங்கி வைத்தார். மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்க, தகுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழை ரோட்டரி மாவட்ட சேர்மன் திருப்பதி வழங்கினார். இதில் பாபநாசம் தாலுக்கா சதுரங்க கழக துணைத் தலைவர் செந்தில்நாதன், அன்பு சீனிவாசன், பாபநாசம் ரோட்டரி சங்க பொருளாளர் ராமநாதன், பக்ருதீன் அலி அகமது, முருகவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

error: Content is protected !!