Skip to content

கடன் தொல்லை….வாலிபர் தற்கொலை…. மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை… திருச்சி க்ரைம்..

கடன் தொல்லை… வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை..

திருச்சி உறையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இவர் விமான நிலையம் பகுதி காமாட்சி அம்மன் கோவில் அருகே தனது சகோதரர்களுடன் சேர்ந்து டீ, டிபன் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் ஸ்டீபன் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் பணத்தை திருப்பி கட்ட முடியாமல் சிரமப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஸ்டீபன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் இரும்பு குழாயில் தூக்கு மாட்டி ஸ்டீபன் தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உறையூர் போலீசார் விரைந்து சென்று ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருச்சி தபால் நிலைய அதிகாரியின் செல்போன் திருட்டு

திருச்சி பாலக்கரை ஹீபர் ரோடு பகு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 58 )இவர் திருச்சி தெப்பக்குளம் தபால் அலுவலகத்தில் தபால் நிலைய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிகள். ஈடுபட்டிருந்த போது அவர் தனது 2 செல் போன்களை அங்குள்ள மேஜை மீது வைத்திருந்தார். அப்போது தபால் அலுவலகத்திற்குள் நுழைந்த ஒரு மர்ம ஆசாமி அங்கிருந்தவர்களின் கவனத்தை திசைதிருப்பி தங்கராஜன் வைத்திருந்த 2 செல்போன்களையும் திருடி கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்துசெல்போனை செல்போனை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

 

 திருச்சியில்  அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை.. 

திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கத்தின் செயலாளர் எம்.கே.எம்.காதர் மைதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கத்தின் உறுப்பினர்களின் குழந்தைகளான பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வித் தொகை வழங்கப்பட உள்ளது.ஏற்கனவே தமிழக அரசு பொதுத்தேர்வு தேதியை அறிவித்துவிட்டது. தமிழ்நாடு கல்வியில் பெரும் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக வரும் 2025 ஆம் ஆண்டு 10,12 -ம் வகுப்பு பொது தேர்வுகளில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் தேர்வு முடிந்து ரிசல்ட் வந்தவுடன் ஒற்றுமை சங்கத்தின் சார்பாக கல்வி உதவி தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும். இந்த கல்வி ஊக்கத்தொகை காந்தி மார்க்கெட்டைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் (எந்த சங்கத்தில் இருந்தாலும்) பொருந்தும்.உறுப்பினர்கள் இல்லாமல் சிறிய,பெரிய அளவில் வியாபாரிகளாக இருந்தாலும், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களாக இருந்தாலும், பாரம் ஏற்றும், இறக்கும் அனைத்து தொழிலாளர்களாக இருந்தாலும், காந்தி மார்க்கெட்டை சுற்றிலும் தள்ளுவண்டிகள், கை வண்டிகள், பூ, பழம், காய்கறி, டீ, டிபன் வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும்,மீன் மார்க்கெட்,உருளைக்கிழங்கு மண்டி, வாழைக்காய் மண்டி புதிய வெங்காயமண்டி, நெல்பேட்டை தெரு, பழக்கடை லைனில் வியாபாரம் செய்வார்களாக இருந்தாலும், அனைத்து சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ரிக்ஷா, கைவண்டி ஆட்டோ, வேன்கள் ஓட்டுநர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் குழந்தைகள் அனைவருக்கும் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். காந்தி மார்க்கெட்டை நம்பி உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள் அனைத்து குடும்பங்களிலும் கல்வி வளர வேண்டும் என்பதற்காக இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் வந்தபின் 80 சதவீதத்திற்கு மேல் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். 2025 ஆம் ஆண்டு கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு செயலாளர் எம்.கே.எம்.காதர் மைதீன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!