தருமபுரி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணித ஆசிரியர் ராஜகுரு கைது செய்யப்பட்டுள்ளார். வகுப்பறையில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக கணித ஆசிரியர் ராஜகுரு மீது புகார் எழுந்தது. பள்ளியில் உள்ள புகார் பெட்டியில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் மனு எழுதி போட்டுள்ளனர். இது குறித்து புகாருக்குள்ளான கணித ஆசிரியரிடம் தலைமையாசிரியர் விசாரணை நடத்தினார் .
குற்றச்சாட்டு உறுதியானதால் தலைமை ஆசிரியர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கணித ஆசிரியர் ராஜகுருவை தருமபுரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.