Skip to content

மயிலாடுதுறையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…..

மயிலாடுதுறையில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சார்பாக திருமண நிதியுதவியுடன் உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு 102 பயனாளிகளுக்கு ரூ.1.57கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கத்தையும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்குதலா ரூ.6,690 வீதம் 33 ஆயிரத்து 450 மதிப்பீட்டிலான தையல் இயந்திரங்களை வழங்கினார். முன்னதாக அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் சமூக நீதி ஆட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். 4 ஆண்டுகளில் இல்லம் தேடி கல்வி மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கான விடியல் பேருந்து பயணம், 31 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் உள்ளிட்ட அடுக்கடுக்கான எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தந்து தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் நம் முதலமைச்சர் ஸ்டாலின்.

மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய முன்னோடி திட்டங்களை தந்து தமிழக முதலமைச்சர் சமூக நீதி ஆட்சியை பார்த்து மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் இதுபோல் நமக்கு முதலமைச்சர் கிடைக்கவில்லையே என்று ஏங்கி பார்க்கக்கூடிய அளவில் ஒரு மிகச்சிறந்த ஆட்சியை நம் முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருவதாக தெரிவித்தார். இதில் எம்எல்ஏக்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் ராஜகுமார் கூடுதல் கலெக்டர் சபீர்ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சுகிர்தாதேவி உள்ளிட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

error: Content is protected !!