சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் கேஎப்சி உணவகத்தில் தியாகராயபுரம் பகுதியை சேர்ந்தஃ பரீத் என்பவர் தனது 9 வயது மகனுடன் உணவகத்திற்கு சிக்கன் சாப்பிட வந்துள்ளார். 5 லெக் பீஸ் பர்கர் பெப்ஸி என ஆர்டர் செய்து சாப்பிட்ட நிலையில், அவரது 9 வயது மகன் சாப்பிட்ட சிக்கனில் முடி இருந்ததாகவும், அந்த முடி சிறுவனின் பற்களில் சிக்கீயதாகவும் தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு சிக்கன்களிலும் இவ்வாறு இருந்ததாகவும் சிறுவன் கூறியுள்ளான். இது தொடர்பாக பரீத் கூறும் பொழுது தனது மகன் இரண்டு சிக்கன்களை சாப்பிட்ட நிலையில் இரண்டிலும் மனித முடி இருந்ததாகவும், இது தொடர்பாக உணவக நிர்வாகத்தை கேட்டபொழுது, ‘சார் இதெல்லாம் பெருசு பண்ணாதீங்க..’ என சரிவர பதில் கூறாமல் இருந்தநிலையில் தான் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தெரிகிறது.
முடியால் பெரியதாக எந்த பாதிப்பும் ஏற்படாது, ஆனால் சுத்தமானதாகவும் தரமானதாகவும் இங்கு உணவு தயாரிக்கப்படுகிறது. kfc என்ற நம்பிக்கையின் பேரில் தான் அனைவரும் உணவருந்த இங்கு வருகிறார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.