லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது..
திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தேவர் பூங்கா பகுதியில் உள்ள கால்வாய் அருகில் லாட்டரி சீட்டு விற்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காந்தி மார்க்கெட் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையில்
போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்பொழுது மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்த உடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி முயன்றனர். அவர்களில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது இபி ரோடு அண்ணா நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 32) தாராநல்லூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பதும், இவர்கள் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைபடுத்து 2 பேரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்து கைது செய்தனர்.மேலும் தப்பி ஓடிய சங்கலியாண்டபுரத்தை சேர்ந்த கோபிநாத் (வயது 30)என்பவர்ரை தேடி வருகின்றனர்.
வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பணம் திருட்டு வழக்கு.. மேலும் ஒரு வாலிபர் கைது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வெங்கரை பகுதி சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது42 ) வியாபாரி. இவரது நண்பர் முத்துகிருஷ்ணனுடன் புதுக்கோட்டை செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பஸ் நிறுத்தத்தில் நின்று
கொண்டிருந்தனர். அப்போது ரெங்கராஜ் தனது மனைவி சிகிச்சைக்காக பணத்தை தனது பாக்கெட்டில் வைத்து எடுத்து வந்துள்ளார். இதனை அறிந்த 2 மர்ம நபர்கள் ரெங்கராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.1 லட்சம் பணத்தைப் பறித்து கொண்டு தப்பினர். இதில் போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காட்டூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது42) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பணத்தை திருடிய மற்றொரு வாலிபர் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் பத்திரப்பதிவு … 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு
திருச்சி கொள்ளிடம் கரை சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற ஆறுமுகம் (வயது 59) இவர் கடந்த 2018ம் ஆண்டு மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரிடம் முருகன் அந்த பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான நிலத்தை வாங்கினார். இதற்கான பத்திரப்பதிவு திருவரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. அதன் பின்னர் நிலம் விற்பனை செய்த 4 பேர் சேர்ந்து ஆறுமுகத்துக்கு விற்பனை செய்த நிலத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து வேறு நபருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆறுமுகம் திருவரங்கம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நான்கு பேர் மீது திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.