இன்றைய தினம் தைபூசத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், திருத்தேரோட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் திருத்தோராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது.
விழாவில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆர்.எஸ்.புரம் பகுதி செயலாளர் கார்த்திக். கே. செல்வராஜ் .MC, தலைமை செயற்குழு உறுப்பினர் சோமு(எ) த.சந்தோஷ் MC அறங்காவலர் குழு தலைவர்
பரமசிவன். 72 வது வட்ட செயலாளர் ஜெகதீசன், 79 வார்டு மாமன்ற உறுப்பினர் வசந்தாமணிMC. அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கழக மூத்த முன்னோடி கே.ஆர். பழனிச்சாமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மகேஷ், ராஜா, விஜயலட்சுமி, தேவராஜ், விஜய்கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.