அதிமுக உள்கட்சி விவகாரங்கள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததுடன், அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு குறித்து ஓபிஎஸ், புகழேந்தி தரப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியதாவது:
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து திருப்தி அடைந்த பிறகு தேர்தல் விசாரணை நடத்த வேண்டும் என்றுதான் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
விசாரணை நடத்த அதிகாரம் உள்ளதா என்பதை முதலில் முடிவு செய்யுங்கள் என்று தான் நீதிமன்றம் கூறி உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு அதற்கான அதிகாரம் இல்லை. நாம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு குமாஸ்தா வேலை தான் தேர்தல் ஆணையத்துக்கு.
மனு தாக்கல் செய்தவர்கள் அதிமுகவினரே அல்ல. அவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.