Skip to content

மநீம தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு!….

  • by Authour
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைந்தது. மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டது. கூட்டணியின் போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்படும் என உடன்படிக்கை செய்யப்பட்டது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சந்தித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசன் மாநிலங்களவை எம்பியாக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தல் கூட்டணி, நடப்பு அரசியல் சூழல் தொடர்பாகவும் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
error: Content is protected !!