அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. அத்துடன் எடப்பாடி பழனிசாமியின் மனுவையும் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு குறித்து, வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான புகழேந்தி கூறியதாவது:
உயர்நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளரே இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இனி பிரச்னை இல்லை. தேர்தல் ஆணையமே பிரச்னைகள் குறித்து விசாரிக்கும். இரட்டை இலை யாருக்கு என்பதையும் தேர்தல் ஆணையம் விசாரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் எம்.பி. கே. சி. பழனிசாமி கூறும்போது, எடப்பாடியின் வாதம் இனி எடுபடாது, என்றார்.