Skip to content

திருச்சி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…..

  • by Authour

திருச்சி அருகே துவாக்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள தேவராயநேரி பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. பள்ளி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை பகலில் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப் பதாகவும் மாலை 4.30 மணிக்குள் அது வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து, உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் துவாக்குடி போலீஸôருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் துவாக்குடி காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையிலான போலீஸôர் மற்றும் மோப்பநாய் படையினரும் பள்ளி வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதுபோலவே காட்டூர் பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளி நிர்வாகத்தின், தொடக்கப்பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அங்கும் சோதனை நடைபெற்றது. எனவே இது வெறும் மிரட்டலாக இருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!