Skip to content

திருச்சி அருகே அரசு மதுபாட்டில்களை கள்ள சந்தையில் விற்ற 2 பேர் கைது…

தமிழக அரசு வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு உள்ளது.

இந்த நிலையில் இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச் சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்து வருகின்றனர். அவர்களை போலீசார் பல இடங்களில் கைது செய்து அரசு மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி செங்குளம் கரை பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை கள்ள சந்தையில் விற்பதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் அந்த பகுதியில் அதிரடியாக சென்று சோதனை செய்த பொழுது அரியமங்கலம் ஆயில் மில் செக் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (48) என்பவன் கள்ளச் சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து பொழுது கையும் காளவுமாக திருவெறும்பூர் போலீசார் பிடித்தனர் அவன் மீது ஏற்கனவே திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள தொண்டமான பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே கள்ளச் சந்தையில் அரசு மதுபான பாட்டில்கள் விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் அந்த பகுதியில் அதிரடியாக சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் துவாக்குடி வடக்கு மலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராமர் மகன் பிரபு ( 31 ) என்பவன் கள்ளச்சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தப்பொழுது கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவனிடமிருந்து 116 அரசு மதுபான பாட்டில்களையும்,மதுபான விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்

error: Content is protected !!