Skip to content

திருச்சியில் கல்லூரி மாணவரை தாக்கிய ரவுடி கைது….

திருச்சி உய்யகொண்டான் திருமலை செல்வா நகர் 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் சாய் செந்தில் ( 19 ). இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இவருடைய நண்பர் அர்பான் என்பவருக்கும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது குறித்த முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று
சாய் செந்தில் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சமரசம் செய்வதற்காக காந்திபுரம் பகுதியிலுள்ள டீ கடைக்கு வந்தனர். அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் அவரது நண்பர்கள் மற்றும் ஒரு மர்ம நபர் செந்திலை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த செந்திலை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சாய் செந்தில் அளித்த புகாரின் பேரில் உறையூர் இன்ஸ்பெக்டர் ராமராஜன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் தென்னூர் வாமடம் சப்பானி கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற ரவுடியை கைது செய்தனர். மேலும் பரத், கார்த்திக் என்ற இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!