Skip to content

ஏகத்துவ எழுச்சி மாநாடு- அறந்தாங்கியில் நடந்தது

  • by Authour

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக,ஏகத்துவ எழுச்சி மாநாடு அறந்தாங்கியில் நடைபெற்றது.மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர்
எச். சித்திக் ரகுமான் தலைமை வகித்தார்.டிஎன்டிஜெ. மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான், மாநிலப் பொருளாளர் ஏ. காஞ்சி இப்ராஹிம், மாநிலச் செயலாளர்கள் ஐ. அன்சாரி, கே. ரபீக் முகமது ,  மாவட்டச் செயலாளர் பி. முகமது மீரான், பொருளாளர் எஸ். ரபீக் ராஜா, துணைச் செயலாளர்கள் ஏ.ஷேக் அப்துல்லாஹ், எம்.புதுகை மீரான், ஏ. அப்துல் ரஹ்மான் ரஹுஃப், எம்.ஷேக் அப்துல்லாஹ், மருத்துவ அணிச் செயலாளர் சபியுபுல்லா மற்றும் மாணவரணிச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், வர்த்தகரணிச் செயலாளர் உஸ்மான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில்டிஎன்டிஜெ. தணிக்கை குழு தலைவர் எம்எஸ்.சுலைமான் ஃபிர்தவ்ஸி, டிஎன்டிஜெ. மாநிலச் செயலாளர் என்.முஹம்மது ஃபைசல், பேச்சாளர் கேஎஸ்.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி  ஆகியோர்  சிறப்புரையாற்றினார்கள்.
தொகுப்புரை மற்றும் தீர்மானங்களை மாவட்டத் தலைவர்எச்.சித்திக் ரகுமான் வாசித்தார்.இந்த மாநாட்டில் சமூக விழிப்புணர்வு பட்டிமன்றம் மற்றும் மதரஸா மாணவர்கள் கண்காட்சிகள் நடைபெற்றது.

error: Content is protected !!