சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். காமெடி நடிகர் கஞ்சா கருப்பு இன்று சிகிச்சைக்காக வந்தார். காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த அவர், கூட்டம் அதிகமாக இருப்பதை பார்த்து மருத்துவர்கள் ஏன் வரவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர்கள் வராததால் ஆத்திரம் அடைந்த நடிகர் கஞ்சா கருப்பு மக்களுடன் சேர்ந்து மருத்துவர்கள் இல்லாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார். காலை 7 மணியில் இருந்து மருத்துவர்கள் இல்லாமல் காக்க வைத்ததாகக் கூறி ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.